
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவையின் சார்பில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சத்திரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார் மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதாகர் வரவேற்றார் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஒன்றிய செயலாளர் ரங்கசாமி மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மா பாசறை செயலாளர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியன் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் நிகழ்ச்சியில் விவசாயி அணி செயலாளர் முனிவண்ணன் நகர செயலாளர் தமிழரசன் பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம் இளைஞரணி செயலாளர் சங்கர் ஒன்றிய மாணவரணி பொருளாளர் செந்தில்குமார் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் சுவாமிநாதன் இணை செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்