ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்பு…

ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பாக நடத்திய கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்றனர்.

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மகாலில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பாக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை அரசு மருத்துவரும், கோ கிரீன் இந்தியா தலைவருமான டாக்டர் மனோஜ்குமார் ஏற்பாட்டில் சிறப்பாக செய்திருந்தார்.
அதிமுக அவைத்தலைவர் திரு.சாமிநாதன் தலைமை வகித்தார். கோ கிரீன் இந்தியா செயலாளர் ரோஜா அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதே போல சிறுமிகளும் ராதை வேடமிட்டு வந்திருந்தனர்.மேலும் பெண்களுக்கான போட்டிகளும், ஆடவர்களுக்கான உறியடி போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக அவைத்தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான எம்.சாமிநாதன் பரிசுகளை வழங்கினார்.

மேலும் அதிமுக கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் ராமநாதன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதாப் மற்றும் கவின், கண்ணன், சக்திகுமார், ஆட்டோ ரவி, குமுணன்,பாலா ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் மகத் ஜெய பிரபு நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *