
திண்டுக்கல்லில் விசிக நிறுவன தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனின் 63 - வது பிறந்தநாளை முன்னிட்டு செல்லாண்டி அம்மன் கோயில் தெரு அருகே உள்ள நாராயணப்பிள்ளை தோட்டத்தில் ஏழை , எளிய மக்களுக்கு அன்னதானமும், மற்றும் வேட்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சமூக நல்லிணக்க பேரவையின் நகர செயலாளர்
அ. சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். சமூக நல்லிணக்க பேரவையின் நகர அமைப்பாளர்
எம்.அக்பர்அலி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்
க.மைதீன்பாவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அன்னதானத்தை தொடங்கி வைத்து, ஏழை , எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குஇலவச வேட்டி , சேலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் சமூக நல்லிணக்க பேரவையின் மாவட்ட அமைப்பாளர் அ.பாபு, இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் சி.இருதயராஜ், தொகுதி செயலாளர் கு.பெர்னா, நகரச் செயலாளர் ஆ.ஆனந்தராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சு.யுவராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்
ப.மருதுபாண்டி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் ல.மரியராஜ் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி ,ஜான்சன் ,தினேஷ், இம்ரான், ஆனந்த், கலீல் முகமது, ஐயப்பன், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.