திருப்பரங்குன்றம் திருகூடல்மலை
தண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா
மதுரை அக் 27 மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள
திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அருள்மிகு தண்டபாணி கோவிலில் கந்தர் சஷ்டி விழா தொடங்கியது. இதில் தண்டாயுதபாணி சுவாமிக்கு பதினாறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில் தண்டாயுதபாணி சுவாமிக்கு வேடன் , சந்தனக்காப்பு, ஆண்டிகோலம் போன்ற அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வரும்
28ந்தேதி வரை காலை 8,00 மணி முதல் 10.00 வரை தண்டபாணி சுவாமிக்கு
அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை கந்தர் சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
மேலும் ஆலயத்தை தொடர்பு கொள்ள
க.இ.சே.இரா.தட்சணாமூர்த்தி மேனேஜிங் டிரஸ்டி-5வது தலைமுறை
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் திருக்கூடல்மலை (புசுண்டர்மலை), திருப்பரங்குன்றம்,
98421 24843, மேற்கண்ட செல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.












Leave a Reply