இளையான்குடி
ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நவ. 3ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடியில் பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்கள் நான்காவது நாயன்மார் எம்பிரான் இளையான்குடி மாற நாயனார்க்கு சிவபெருமான் கைலாய காட்சியை ஜோதி வடிவில் காட்சி கொடுத்த ஸ்தலமாக உள்ள ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நவ., 3 ல் மகா கும்பா பிஷேகம் நடைபெறுகிறது.
சிவகங்கை தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட இக் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடிக்கப்பட்டு
விமான கோபுரம் ராஜகோபுரம் மற்றும் எம்பிரான் மாறநாயனார் சன்னதி மற்றும் விநாயகர் பைரவர் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.வரும்அக்., 31 அன்று காலை 8:00 முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக் னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவங்குகின் றன. அன்று மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக சாலை பூஜையும், நவ., 1 அன்று காலை 8:00 முதல் 11:30 மணிக்குள் 2 ம் கால யாகசாலை பூஜை, பூர்ணா குதி, தீபாராதனை, அன்று
மாலை 5:30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, நவ., 2 ம் தேதி காலை 8:00 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல், மாலை 6:05 மணிக்கு 5 ம் கால யாக சாலை பூஜையும், சுவாமி அம்பாளுக்கு எந்திர ஸ்தா பனம் செய்யப்படும்.
நவ., 3 அன்று காலை 5:30 மணிக்கு 6 ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங் குகிறது. அன்று காலை 6:30 மணிக்கு நாடி சந் தனம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், காலை
9:30 முதல் 10:25 மணிக் குள் மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார் கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
அன்று மதியம் 12:05 முதல் 1:30 மணி வரை மகா அபிஷேகம், சிறப்பு அலங் காரம், தீபாராதனை, பிரசா தம் வழங்கப்படும். அன்று மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி கள் புறப்பாடும் நடைபெ றும். மகாகும்பாபிஷேகம் விழா ஏற்பாடுகளை இளையான்குடி ஆயிர வைசிய சபை யினர் செய்து வருகின்றனர்.












Leave a Reply