தேனியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இன்று தேனியில் ரோட்டரி கிளப் ஆப் ஸ்டார்ஸ் என்ற அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் துவங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பங்களா மேடு, பழைய பேருந்து நிலையம், நேரு சிலை மும்முனை சந்திப்பு வழியாக பெரியகுளம் சாலை, வாரச்சந்தை என தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப்பேரணி ரயில்வே கேட் அருகே நிறைவடைந்தது.
முறையான முன் பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலமாக மார்பக புற்றுநோயை குணமடையச் செய்யலாம், ஒன்றாக போராடுவோம், மார்பக புற்றுநோயை வெல்வோம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு தன்னார்வலர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.












Leave a Reply