தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை சட்டவிரோதமான பொருட்களை பறிமுதல் செய்தனர் மீன்சுருட்டி காவல்துறையினர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்து சேர்வ மடத்தைச் சேர்ந்த ஐயப்பன்(39/25)த/பெ மனோகரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து மீன்சுருட்டி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து அவர்களிடமி ருந்து2.700 கிராம் எடையுள்ள135 பாக்கெட் ஹான்ஸ் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் பிற போதை வாஸ்துகளை விற்பனை செய்வது குற்றமாகும் பள்ளிகள்/கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இடத்தில் 100 மீட்டர் சுற்றளவு தொலைவில் விற்பனை செய்வதும் , பள்ளி மாணவர்களுக்கு இவற்றை விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் மிதிக்கப்பட்டு சட்டப்படி அவர்கள் கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும் சிறுவர் நீதிச்(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.








Leave a Reply