மாற்றுத்திறனாளிக்கு இரண்டு நிமிடம் டீ கொடுக்க தாமதமானதால் டீக்கடையில் புகுந்து தந்தை மகன் டீ மாஸ்டரின் மூக்கின் மீது குத்து ! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! தன்னைப் பற்றி தவறாக பேசியதால் என் மகன் டீ மாஸ்டரை தாக்கியதாக தாய் ஆதங்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் குருமான்ஸ் காலனி பகுதியை சார்ந்த கார்த்திக் என்பவர் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி டீக்கடை என்ற பெயரில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் இவருடைய கடையில் பூரிகமாணிமிட்டா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் டீக்கடையின் அருகே விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிகாமணி (48) என்பவர் கிரிகுமரன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சிகாமணியின் மகன் கிரி குமரன் (20) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி டீக்கடைக்குச் சென்று டீ கேட்டுள்ளார்.
அப்போது இரண்டு நிமிடம் தாமதமானதன் காரணமாக டீ மாஸ்டருக்கும் மாற்றுத்திறனாளிக்கும் இடையே வாய் தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது தந்தையிடம் கிரி குமரன் கூறியதன் காரணமாக இருவரும் ஆத்திரமடைந்து டீ கடைக்கு சென்று டீ மாஸ்டரை சாரா மாறியாக மூக்கின் மீது குத்தி உள்ளனர்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் தந்தை சிகாமணி மற்றும் அவருடைய மகன் கிரி குமரன் ஆகியவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிரி குமரனின் தாயார் சுமதி கூறுகையில்
தன்னை பற்றி எனது மகனிடம் சைகை காண்பித்து தவறாக பேசியதாலே எனது மகனும் எனது கணவரும் அடித்தார்கள் அடித்தது தவறு என்றால் தன்னைப் பற்றி டீ மாஸ்டர் பேசியதும் தவறு என்று ஆதங்கமாக தெரிவித்தார்..








Leave a Reply