தமிழக பாரம்பரிய பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு
டிசம்பர் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் சர்வதேச முதலீட்டாளர்கள்,வர்த்தகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் கோவையில் தகவல்
உலக அளவில் முதன் முறையாக உலக தமிழர் வர்த்தக பெருவிழா மலேசியாவில் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது..
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது..
இதில் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர்,பாலகிருஷ்ணன்,உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்..
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள், தொழில்நுட்பங்கள்,ஆடை அலங்கார பொருட்கள்,உள்ளிட்டவற்றை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில் உலக தமிழர் வர்த்தக மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்…
தமிழகத்தில் உள்ள உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில் சார்ந்த சேவைகளுக்கு இந்த உலக தமிழர்களின் வர்த்தக மாநாடு பெரும் வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தனர்…
டிசம்பர் 23 ஆம் தேதி மலேசியாவில் உள்ள உலக தமிழர் வர்த்தக சங்கத்தின் நாலாவது ஆண்டு விழாவும் இதன் ஒரு பகுதியாக நடைபெற உள்ளதாகவும், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியா வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்..
மலேசிய வாழ் மக்கள் தமிழர்களின் பாரம்பரிய சிறு தானியங்களை அதிகளவில் விரும்புதாகவும் எனவே இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் சிறு தானியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும், இதனால் உலகம் முழுவதும் தமிழர்களின் வர்த்தகம் பரந்து விரிய இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்…








Leave a Reply