நடிகர் விஜய் இன்னும் அரசியலில் பங்கு பெறவில்லை அரசியல் கட்சிதான் துவக்கி இருக்கிறார் இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை அவரின் செயல்பாடுகளை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகம் தேனி பங்களாமேடு பகுதியில் இன்று திறக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு கட்சி மாவட்ட அலுவலகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு, அகில இந்திய வேளாளர் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றம் குறித்து திண்டுக்கல்லில் வரக்கூடிய 24 ஆம் தேதி மிகப்பெரிய மாநாடு நடத்துகிறோம்
இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன் இன்று தேனியில் சுற்றுப்பயணம் முடிவடைகிறது
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் இணைவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மாநில அரசு ஏன் தயங்குகிறது என முதலமைச்சரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்
தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி தேனியில் சீமான் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தேவேந்திர குல வேளாளரை பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற வலியுறுத்துவது குறித்து யார் ஆதரவு தெரிவித்தாலும் அதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்
மேலும் நடிகர் விஜய் இன்னும் அரசியலில் பங்கு பெறவில்லை அரசியல் கட்சிதான் துவக்கி இருக்கிறார் இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை அவரின் செயல்பாடுகளை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும்
பஞ்சமி நிலங்கள் தமிழக முழுவதும் 5 லட்சம் ஏக்கர் இருக்கின்றது இதனை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு ஏன் மௌனமாக இருந்து வருகிறது என தெரியவில்லை என தெரிவித்தார்