அரியலூர் – தவெக அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு அது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என நலுவியவாறு பதில் அளித்தார் – நயினார் நாகேந்திரன் பேட்டி
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் சென்னையில் சந்திக்க இருப்பது குறித்த கேள்விக்கு தனிப்பட்ட நபர்களை பற்றி பதில் கூற முடியாது என கூறினார்
அரியலூர் மாவட்டம் புதுக்குடியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி என்பது ஒரு முக்கியமான அம்சம் மட்டும்தான். சில காலங்களில் ஏற்கப்படும் மக்கள் விரோத அரசு என வரும்போது மக்கள் விரும்பாத அரியலூரில் அரங்கேறி உள்ளது மாதிரி தமிழ்நாடு முழுவதும் உள்ளது. அரியலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி என்பது ஒரு பேருக்கு வைத்துக் கொள்ளலாமே தவிர அதனால் வெற்றி என்பது கிடையாது கூட்டணி முக்கியம் என்பதை சொல்ல முடியாது. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என சொல்வதைப் பார்த்தால் கூட்டணியில் ஏதோ ஒரு பிளவு இருக்கிறது என்று தானே அர்த்தம் மனசு சரியில்லாமல் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கூறும் போது செம்பரபாக்கம் ஏரியை திறந்து விடுவதற்கு எங்களை அழைக்கவில்லை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் இதிலிருந்து சமூக நீதி எங்கே உள்ளது. இந்த ஆட்சியின் கவுண்டவுன்ஸ் ஸ்டார்ட் ஆகியுள்ளது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன ஆட்சியின் நாட்கள் குறைக்கப்பட்டு வந்து கொண்டே உள்ளது. அதிமுக கூட்டணிக்கு தவெக வருவதற்கான பிள்ளையார் சுழி போட்டாச்சு என எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு பிள்ளையார் சுழி போட்டு எந்த காரியம் செய்தாலும் நன்றாக தான் இருக்கும் ஆனால் அது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது அதிமுக கூட்டணிக்கு தவெக வருவதற்கான வாய்ப்பு உண்டா என்று கேட்டபோது அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என கூட்டணி குறித்த கேள்விக்கு நழுவியவாறு பதில் அளித்தார்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னையில் நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக வரும் செய்தி குறித்த கேள்விக்கு ஒரு தனிப்பட்ட நபர்களை பற்றி கேள்வி கேட்கும்போது அதற்கு பதில் சொல்வது என்பது முடியாது கரூர் சம்பவத்திற்கு காரணம் திமுக அரசாங்கம் தான். நடிகர் விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றால் அவரது உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பினர் கரூரில் குண்டர்கள் இருக்கிறார்கள் திமுகவை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தி இருக்கிறார்கள் அங்கே யாருமே போக முடியாது எனவும் குற்றம் சாட்டினார்












Leave a Reply