பகுஜன் சமாஜ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் செல்லம்மாள்
வாழப்பாடி பேலூரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகள்
பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன் அவர்களிடம் கோரிக்கை மனு
சேலம் வாழப்பாடி தாலுகாவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் 25/10/2025 ஆய்வு செய்தபோது
பகுஜன் சமாஜ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் செல்லம்மாள் அவர்கள்
ஆதி திராவிடர் பொதுமக்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து கோரிக்கையாக வைத்தார்
வாழப்பாடி அருகே உள்ள பேளுர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்திற்காக
40 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி கடைகள் கட்டப்பட்டது.ஆனால் இன்று வரை இந்த இடத்தில் கடைகளில் பயன்பாட்டில் இல்லாமல் இடிந்த நிலையில் இருந்து வந்தது.
தற்போது கடைகள் கட்டுவதற்கு அரசு தாட்கோ மூலம் நிதி ஒதுக்கீடு செய்து இடிந்த கட்டிடங்களை எடுத்துவிட்டு புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்த நிலையில் இப்பகுதியில் ஆதிக்க ஜாதியினர் இந்த இடத்தில் கடையில் கட்டக்கூடாது என்று பேளுர் நகர திமுக சுப்பிரமணி என்பவர் பல நபர்களை அழைத்துக் கொண்டு இன்று இடத்தை பார்வையிட்டு
ஆய்வு செய்ய வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மற்றும் சேலம் வருவாய்த்துறை அலுவலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் பேரூராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் அருகில் இருந்தனர். உடனடியாக அதே இடத்தில் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகள் கட்டி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் செல்லம்மாள் இருபதுக்கும் மேற்பட்டோருடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்












Leave a Reply