மாத்தூர் தொட்டிப்பாலத்தில் உடைந்த பகுதிகள்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகவும் நீளமானது, உயரமானது என்ற சிறப்பு பெற்றது. 1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட மாத்தூர் தொட்டிப்பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மறு கரைக்கு நடந்து செல்வது இனிய அனுபவம் ஆகும்.
தொட்டிப்பாலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கைப்பிடிச்சுவர்கள் உடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். உடைந்த பகுதிகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








Leave a Reply