JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

தேர்தலில் போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணி வெற்றி

சென்னையில்
திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மின்வாரியத்தில் பணி புரியும் சென்னை வடக்கு திட்ட மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆனது நடைபெற்றது..

தேர்தலில் போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது..

சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில்
சென்னை வடக்கு திட்ட மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆனது நடைபெற்றது

ஓய்வு பெற்ற மின் கழக உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 14 பதவிகளுக்கு இந்த போட்டியானது நடைபெற்றது.

இதில் பத்து இடங்களில் முன்னாள் நிர்வாகியான சசிகுமார் தலைமையில் மின்கழகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்

இதில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சசிகுமார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இதில் முக்கிய பதவிகளாக கருதப்படும் திட்டத் தலைவர் பதவிக்கு நாகராஜன் என்பவரும்
திட்டச் செயலாளர் பதவிக்கு சசிகுமார் என்பவரும்
திட்ட பொருளாளர் பதவிக்கு அருள் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இவர்களைத் தொடர்ந்து துணைப் பதவிகளான
துணைத் தலைவர் பதவிக்கு சிவப்பிரகாசம் என்பவரும்

அதேபோல மேலும் இரண்டு துணைத் தலைவர் பதவிகளுக்கு
முனுசாமி ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும்

மேலும் துணைச் செயலாளர் பதவிகளுக்குசங்கர்.. மாறன் வேதமணி என்பவர்களும் துணைப் கோட்டச் செயலாளர் பதவிக்கு ஜெகநாதன் என்பவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மொத்தம் 222 வாக்குகள் பதிவான நிலையில் அதில் 137 வாக்குகள் பெற்று சசிகுமார் தலைமையிலான 10 பேர் கொண்ட அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

இந்த முடிவுகளை
தேர்தல் நடத்தும் அதிகாரிகளான ஓய்வு பெற்ற முன்னாள் மின்கழக அதிகாரிகள்விஜயகுமார் மற்றும் தனசேகரன் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இவர்கள் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

இவர்களது வெற்றியினை சக மின்கழக ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *