அருள்மிகு கள்ளியங்காடு சிவன் கோயிலில் கண்களில் ” களிக்கம் ” எனும் மூலிகை சாறு விடும் நிகழ்வு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளியங்காடு அருள்மிகு சிவன் கோயிலில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் ” களிக்கம் ” எனும் மூலிகை இலைச் சாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்களில் விடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து சித்தர் கூறுகையில் :-
” களிக்கம் ” என்னும் மூலிகைச்சாறு கண்களில் விடுவதால் கண்களில் ஏற்ப்படும் கண்புரை , கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மற்றும் கண்களில் தேங்கியுள்ள அழுக்குகள் உடனே வெளியேறும், உதட்டில் உள்ள வெண் குஸ்ட்ட நோய் தீரும் , மேலும் கண்களில் இருந்து வரும் நீரை கண்ணத்தில் தேய்பதனால் தோல் வழியாக மூலிகைச் சாறு உள் ஊடுறுவி முகத்தில் ஊரல், சொறி, தேமல், முகப்பரு , தீராத தலைவலி , நீங்கும் இதை கண்களில் ஊற்றும் போது கண்களை மெதுவாக திறந்து மூடி கொண்டு இருந்தால் கண்களில் உள்ள எரிச்சல் நீங்கும் மேலும் பெண்களுக்கு மாதவிடாய் வலி குறையும், மேலும் தள்ளிப்போது முறையாக வரும், கர்ப்பபையை சுத்தப்படுத்தும் , மேலும் இந்த சாறு விடுவதற்க்கு கண்களில் ” லென்ஸ் ” பொறுத்தியவர்கள் ஒரு வருடம் கழிந்துதான் விட வேண்டும், சாறு எடுக்கும் நாள் அன்று இறச்சி , மீன், போன்ற மாமிசவகைகள் சாப்பிட கூடாது. மேலும் மாதம் தோறும் தொடர்ந்து விட்டு வந்தால் கண் மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் தொடர்ந்து மாதம் இரு முறை ஊற்றிக் கொண்டால் உயிர் மூச்சு உள்ள நாள் வரை கண் பார்வை தெளிவாக இருக்கும் , கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்திற்கு மேல் இந்த மூலிகை சாறு விடலாம் . இவ் அமைப்பு தமிழகத்தில் தின்டுகல்லை மையமாக வைத்து அங்கிருந்து தயார் செய்து கொண்டு வந்து இளநீரில் கலந்து சுமார் மூன்று மணி நேரத்திற்க்குள் உபயோகப்படுத்த வேண்டும், இவ் அமைப்பு பாரம்பரிய வைத்தியர் முத்து கிருஷ்ணன் ஐயா தலைமையில் குழு அமைத்து நேற்று சித்த வைத்தியர் மதுரம் பொதுமக்களுக்கு கண்களில் மூலிகை இலைச்சாறு ஊற்றி அறிவுரைகள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திற்க்கு தங்கள் பயணத்தை மேற்கொள்ள போவதாகவும் இதுவரை தமிழகத்தில் தினமும் சுமார் ஆறு லட்சம் பேர் பயன் அடைந்து வருவதாகவும் கூறினர். நேற்று கள்ளியங்காடு சிவன் கோவிலில் மூலிகை சாறு விடுவதற்கு என சுமார் இரு நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என கள்ளியங்காடு அருள்மிகு சிவன் கோயில் தலைவர் சின்னையா , பொருளாளர் சேகர், மற்றும் நிர்வாகிகள் கூறினார்.








Leave a Reply