வடகிழக்கு பருவமழை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையாகப் பெய்ததால் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ளைக்காடாக தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வயல் வெளிகள் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் பாசனத்துறை நிர்வாகிகள் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அறிக்கை* அனுப்பி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக வீரநாராயணமங்கலம் பகுதியில் ‘கடுமையான ஆக்கிரமிப்பு மற்றும் தண்ணீர் வழிப்பாதைக்குள் உள்ள மரங்கள் காரணமாக’ பழையாற்றில் மழை வெள்ளம் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு, தண்ணீர் அதிக அளவு பாய்ந்து அப்பகுதி கரையையும் கரையோர தார் சாலையையும் அரித்து சென்றது. மேலும் தண்ணீரானது கரையை தாண்டி அப்பகுதி வீரநாராயணமங்கலம் வடபத்து மற்றும் தாழக்குடி மேலப்பத்து பகுதிகளில் உள்ள வயல்களில் பாய்ந்து ஏலா முழுவதும் தண்ணீரில் மூழ்கிய கிடக்கிறது.
இந்த பகுதிகளை பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், ஜெனில் சிங் உறுப்பினர்கள் தாழைகாந்தி, டோனிபெலிக்ஸ் உள்ளிட்டோர் நேற்று சென்று நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, ” உடனடியாக அடித்துச்செல்லப்பட்ட கரையை சீரமைக்க வேண்டும் என்றும், கும்ப பூ சாகுபடி செய்வதற்கு இடையூறாக ஏலாவில் தேங்கி கிடக்கும் தண்ணீரை நிரந்தரமாக வடிய செய்வதற்காக வடிகாலை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி – அந்த தண்ணீரை அருகில் இருக்கக்கூடிய தேரேகால்வாயில் வடிவதற்கு ஏற்பாடு செய்து தந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும்” என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளையும் வருவாய்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பாசனத்துறை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அப்பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் பழையாற்றின் கரையை சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு பலப்படுத்தி உடைப்பை சீரமைப்பதுடன் ஆற்றை ஆளப்படுத்துவதற்கும் , 750 மீட்டர் நீளமுடைய ஏலாவின் வடிகாலை தூர்வாருவதற்கும் மதிப்பீடு தயாரிக்கும் வேலையை ஆரம்பித்துனர். அரசின் அனுமதியைப் பெற்று உடனடியாக இந்த பணிகள் தொடங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்த பாசனத்துறை நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அரசுக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .
மழையினால் சேதம் அடைந்த பழையாறு மற்றும் தண்ணீர் தேங்கி கிடக்கும் பகுதி வயல்களில் பாசனத்துறை நிர்வாகிகள் ஆய்வு செய்து மதிப்பீடு தயாரிப்பு





Leave a Reply