நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு போலீஸ் குவிப்பு பதட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உருவ சிலையின் கை பாகம் உடைப்பு இதனால் அங்கு பதற்றம்,குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான.தளவாய்சுந்தரம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு உடனடியாக எம்ஜிஆர் சிலையை உடைத்த நபரை கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு . இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. சம்பவம் அறிந்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லலித் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதப்படுத்தப்பட்ட சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை அப்புறப்படுத்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.













Leave a Reply