திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் காணியம்பாக்கம் ஊராட்சி பெருமாள் கோவில் எதிரில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கலந்த குடிநீரில் கலப்பதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது ஒரு மாத காலமாக சாக்கடை கலந்த குடிநீர் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் காணியம்பாக்கம் பெருமாள் கோவில் எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கடியால் குழந்தைகள் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள் உடனடியாக அந்த இடத்தை சீர் செய்து கொடுக்கும்படி ஊராட்சி நிர்வாகமும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள் இதனை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகமும் ஊராட்சி வட்டார வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் இதன் சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களின் கோரிக்கையாகும் . பார்த்திபன் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் ஜெ .ஜெ தொலைக்காட்சி
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கலந்த குடிநீரில் கலப்பதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு












Leave a Reply