அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சிலால் வால் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே மழை நீர் தேங்கி நிற்பதால் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் வால்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீரானது வடிய வடிகால் வசதி இல்லாததால் சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாததால் நான்கு நாட்களாக தேங்கிய மழை நீரால் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் மழை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கும்பகோணம் – ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.












Leave a Reply